கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பாக மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய ஜனாதிபதி – பிரதம நீதியரசர் சட்ட மா அதிபர் காவல்துறை மா அதிபர் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார். மக்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே.
மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் போது, அவர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படுகிறது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.