ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் 16,000 வழக்குகள்

0
200

ஊழியர் சேமலாப நிதி செலுத்தாமை தொடர்பில் 16 ஆயிரத்துக்கும் அதிக வழக்குகள் நீதிமன்றில் குவிந்திருக்கின்றன.

அதனால் இந்த வழக்குகளை தொழில் நியாயாதிக்க சபைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மலந்திருக்கும் புதுவருடத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் சடத்தில் திருத்தம் மேற்கொள்ள இருக்கின்றோம். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் ஊழியர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலே இந்தத் திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளோம்.

அத்துடன் எந்தவொரு நிறுனத்துக்கும் சேவைக்காக இணைந்துகொள்ளும் ஊழியரை, குறிப்பிட்ட காலத்துக்குள் ஊழியர் சேமலாம நிதியத்தில் பதிவு செய்தலை கட்டாயமாக்கும் சட்டம் ஒன்றையும்  இந்தத் திருத்தத்தில் உள்வாங்க இருக்கின்றோம்- என்றார்.