28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘எங்களுக்கான பாதையினை உருவாக்குதல்’
எனும் தொனிப்பொருளில் நிகழ்வு

‘எங்களுக்கான பாதையினை உருவாக்குதல் ‘ எனும் தொனிப்பொருளில் பெண்கள் குடும்பத்த தலைவர்களுக்கான மாறிச்செல்லும் வரைவிலக்கணங்களுக்கான ஆய்வின் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி இந்துமதி ஹரிஹர தாமோதரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது

இந்நிகழ்வில் மட்டக்களப்புஇ அம்பாறைஇ திருகோணமலை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் பெண்கள் சமாச செயற்பாட்டாளர்களின் ஆய்வு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் மாற்றத்தை நோக்கி இளையோர் சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகள்இ பொருளாதார நெருக்கடியால் இளையோர் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள்இ பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களும் அதன் தாக்கங்களும்இ மலையகத்தில் மாணவர்களின் இடைவிலகல்இ முஸ்லிம் மக்கள் மத்தியிலான விவாகரத்தின் போக்குகளும் அதன் தாக்கங்களும் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளின் பாதிப்பினால் சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் அனைத்து மட்டங்களுக்குமான பரிந்துரைகள் நிகழ்வில் பிரகடனங்களாக சமர்ப்பிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறீகாந்த் உரையாற்றிய போது அரசின் எந்தவொரு உதவித் திட்டத்திலும் முதலாவதாக உதவிகளைப் பெறும் தரப்பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கான உரிமைகள் கொள்கைகள்இ சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் பல்வேறு கொள்கையாக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றார்கள். இவர்களில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் பொருளாதார மேம்பாடு கண்டவர்களாக உள்ளார்கள். கல்வி ரீதியிலான முன்னேற்றங்களைக் கண்டவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். காலங்காலமாக பெண்களையும் சிறுவர்களையும் இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்காளக அடையாளப்படுத்தி வந்திருக்கின்றோம்.

எந்தவொரு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் பூச்சியத்தில் இல்லை அவர்களை பூச்சிய நிலைமையிலிருந்து முன்னேற்றியதன் பங்களிப்பு அரச சார்பற்ற நிறுவனங்களையும் அரசின் சில கொள்கைகளையும் சாரும்.பெண்களை பொருளாதார ரீதியாக மீண்டெழுந்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் இ அரசில் தீர்மானங்களை எடுக்கின்ற அரசியல் பங்களிகளாக மாற்ற வேண்டும். ஒட்டு மொத்த சமூகத்திற்கே கேடு உண்டாக்கும் போதைப் பொருள் பாவனைஇ பெண்களை பாலியல் இலஞ்சத்திற்கு ஆளாக்குவது என்பவை வெறுமனே பெண்களுக்கான பிரச்சினைகளாக மட்டும் நோக்காது .இதற்கு அனைவரும் இணைந்து சட்டம் ஒழுங்கின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என இதன்போது தெரிவித்துக்கொண்டார் .

மேலும் இந் நிகழ்வில் கலந்துகொண்ட சமூக செயல்பாட்டாளர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles