எசல பெரஹராவை முன்னிட்டு சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

0
64

வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா காரணமாக தெனியா அக்குரஸ்ஸ பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் விடுத்துள்ளனர்.

நாளை பிற்பகல் 01 மணி முதல் இரவு 10 மணி வரை வீதி உலா நடைபெறுவதால் அவ்வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.