எதிர்காலத்தில் தொழிற்கல்வி தீர்க்கமான பாடமாக மாற்றப்படும் – பிரதமர்

0
9

எதிர்காலத்தில் நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

முறையான, கவர்ச்சிகரமான நிறுவன அமைப்பைக் கட்டமைப்பதற்காக நாடு தழுவிய தொழிற்கல்வி நிறுவனங்களை மையமாக வைத்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட உழைப்பு நடவடிக்கை திட்டத்தின் ஆரம்ப விழா கம்பஹா தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.