எதிர்காலத்தில் மின் கட்டணத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? சர்வதேச நாணய நிதியம்

0
5

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 4ஆம் மதிப்பாய்வு தொடர்பான பணியாளர்கள் மட்ட உடன்படிக்கையானதுஇ மின்சார கிரய மீட்பு அடிப்படையிலான விலையிடல் மற்றும் முறையான சுய மின்சார விலை முகாமைத்துவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தின் தலைமையதிகாரி இவான் பாபஜோர்ஜியோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மின்சாரக் கட்டணம் சரி செய்யப்படாவிட்டால், இலங்கை மின்சார சபையின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரி செலுத்துவோர் மீது மேலும் அழுத்தம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் கடன் சுமை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இலங்கை மின்சார சபை இத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாயின்இ எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தின் தலைமையதிகாரி இவான் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பணியாளர்கள் மட்ட உடன்படிக்கைக்கு அமைய, 4ஆம் மதிப்பாய்வுக்கு நிறைவேற்று சபை அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகரிக்குமாயின், இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.