எமது மக்களின் உரிமைகள் வெற்றிபெற வேண்டும் எனவும் இந்த மண்ணில் யாரும் கேள்வி கேட்க முடியாத நிலையில் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் எனவும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
33 வது தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் உள்ள ஈ.பி.ஆப்.எல்.எப் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.