எரிபொருள் நெருக்கடி மற்றும் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து, பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் இன்று (3) கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்றத்தை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று (3) பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.
அங்கிகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத பொருட்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.