நாட்டு மக்கள் பொருளாதார சிக்கலில் சிக்குண்ட நிலையில் எரிபொருள் விலையேற்றம் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பேச்சாளர் அருண் ஹேமச்சந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகள் தற்போது தனியார் மயப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது எனவும் கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பேச்சாளர் அருண் ஹேமச்சந்திரா சுட்டிக்காட்டியுள்ளார்.