எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் வாக்குப் பதிவு ஆரம்பம்!

0
72

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
28 உறுப்பினர்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் இம்முறை 8 கட்சிகளும், சுயேட்சை குழுவொன்றும் போட்டியிடுகின்றது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 55 ஆயிரத்து 643 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.