எஸ்.எல்.டி.பி திட்டத்தின் கூட்டம்

0
158

அம்பாரை திருக்கோவில் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள 3கோடி 50 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் ஊடான வேலைத்திட்டங்கள் தொடர்பாக திட்டமிடல் குழுவின் திட்டமிடல் கூட்டமானது இன்று இடம்பெற்றிருந்தது.திருக்கோவில் பிரதேசசபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

உலக வங்கியின் நிதி ஓதுக்கீட்டின் கீழ் திருக்கோவில் பிரதேச சபையின் ஊடாக பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு உள்ளுர் உற்பத்தி மேம்பாட்டு திட்டம் மற்றும் திருக்கோவில் பிரதேசசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் ஊடாக இவ் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

15பேர் கொண்ட எஸ்.எல்.டி.பி திட்டத்தின் திட்டமிடல் குழுவின் முதலாவது கூட்டத்தின் போது திட்ட முன்மொழிவுகளிலிருந்து 7 திட்டங்கள் வேலைத்திட்டத்திற்காக தெரிவு தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை இவ் திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் 3கோடி 50,லட்சம் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் விளையாட்டு மைதானம் அமைத்தல் நெற் களஞ்சியசாலை நடைமுறைப்படுத்தல் உள்ளுர் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தல் பாரம்பரிய உணவகங்களை அமைத்தல் உழுந்து உடைக்கும் இந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்தல் கழிவு வவுசர் ஒன்றினை கொள்வனவு செய்வதோடு ஜாட் ஒன்றினையும் நிறுவுதல் ஆகியதிட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்ததுடன் பிரதேச சபைக் கூட்டத்தின் ஊடாக இதற்கான அனுமதிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறப்படுத்தப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்து இருந்தார்.

இவ் திட்டமிடல் கூட்டத்திற்கு திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் பிரதேசசபை செயலாளர் ஜெயந்தி வீரபத்திரன் உள்ளுராட்சி திணைக்கள சனசமூக உத்தியோகதத்ர் ரீ.ரவீந்திரன் திட்டமிடல் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.