
எஸ் கே நாதன் பவுண்டேஷன் நிறுவனத்தினரால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அமரர் ஊர்தி அன்பளிப்புசெய்யப்பட்டது
கடந்த காலங்களில் யாழ் போதனா வைத்திய சாலையில் இறந்த உடலங்களை வாடகைக்கு வாகன அமர்த்தியே இறந்த உடலங்களை வெளியேற்றியதாகவும் குறித்த விடயத்தினை நிவர்த்தி செய்வதற்கு உதவி புரியுமாறு
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக
எஸ் கே நாதன் பவுண்டேசன் பணிப்பாளர் நாதன் அவர்களினால் 3 மில்லியன் ரூபா பெறுமதியிலான
அமரர் ஊர்தி யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது,
போதனா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் எஸ் கேநாதன் பவுண்டேஷன் பணிப்பாளர் நாதன் அவர்களினால் வைத்தியசாலை பணிப்பாளரிடம் வாகனஉரிமம் கையளிக்கப்பட்டது குறித்தநிகழ்வில்
யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பிரதி பணிப்பாளர் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்