ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் புலனாய்வு பிரிவினரும் தகவல்களை வழங்கிய போதிலும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எதற்காக விசாரணை நடத்தப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.அத்துடன், குறித்த சந்தர்ப்பத்தில் தமது பொறுப்புக்களை தமக்கு பதிலாக மற்றுமொருவரிடம் கையளிக்காது நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டிற்கு செல்கிறார். இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளமை தெளிவாகுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றம்சாட்டியுள்ளார்.