ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் ஏமனிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த தாக்குதல் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் ஹவுதிக்கு ஆதரவு அளித்து வரும் ஈரானுக்கும் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.