28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஏறாவூரின் ஒரு பகுதி முடக்கம்

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து ஊரின் ஒரு பகுதியை தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர் பிரதேசத்திற்கான கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போது பிரதானவீதி தொடக்கம் நூறுஸ்ஸலாம் பள்ளிவாயல் வீதி, அஸ்ஹர் பாடசாலை வீதி மற்றும் ஓடாவியார் வீதி ஆகிய பாதைகளுக்கிடைப்பட்ட ஏறாவூர்- 2 கிராம சேவை அதிகாரி பகுதியை தனிமைப்படுத்தப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினரால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் மூன்றாம் அலையில் மாத்திரம் 134 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களின் வாழ்வாதார நலன்களைக் கருத்திற்கொண்டு பல செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் குறித்த பகுதி மக்கள் பீசீஆர் பரிசோதனைக்குட் படுத்தப்படவுள்ளனர்.

வைத்தியதிகாரி சாபிறா வசீம், பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத், பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த, கொரோனா கட்டுப்பாட்டு கிழக்கு மாகாண செயலணியின் பிரதிநிதி இராணுவ அதிகாரி சமூக , சமய துறைசார் அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles