ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு நிதியினைக் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்றது.
ஏறாவூர் நகர் பிரிவிலுள்ள 15 கிராம சேவை அதிகாரிகள் பிரிவின் 5972 பயனாளிகளுக்கு ஒரு கோடி 86 இலட்சத்து ஏழாயிரத்து நானூறு ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றுமைஸ் தெரிவித்தார்.