போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் ஊழல் ஒழிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் எச்எம். ஷியாம் தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு அமுல்செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள கஞ்சா மற்றும் ஹெறொயின் ஆகிய போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கஞ்சா வைத்திருந்தவர்கள் புன்னக்குடா மற்றும் செங்கலடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் ஹெறொயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் கம்மின்குடா மற்றும் மிச்நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் குற்றச்சாட்டின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
