ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ் நழிம் உள்ளூராட்சி அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்ட நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க ஏறாவூர் நகரசபை திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவை சேர்ந்த 40 ஊழியர்களுக்கு மழைக்கான பாதுகாப்பு அங்கிகள்,பாதுகாப்பு பாதணிகள் வழங்கும் நிகழ்வு தவிசாளர் எம்.எஸ் நழிம் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம், திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்
நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் எம்.எஸ் நழிம் கூறுகையில் நகர சபையில் நேரம் காலம் பாராது அர்ப்பணிப்போடு கடமையாற்றும் நகர சபை ஊழியர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, தற்போதுமழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தொற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது இதனால் ஊழியர்களின் ஆரோக்கியம் நலன் கருதி மழைக்கான பாதுகாப்பு அங்கிகளுடன் பாதுகாப்பு பாதனிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்ன தெரிவித்துள்ளார்.