ஏறாவூர் மஆனீமுல் முஸ்தபா அரபிக்
கலாசாலையின் பட்டமளிப்பு விழா

0
567

மட்டக்களப்பு-ஏறாவூர் மஆனீமுல் முஸ்தபா அறபிக் கலாசாலையின் 16 ஆவது பட்டமளிப்பு மற்றும் 17ஆவது தலைப்பாகை சூட்டுதல் ஆகிய நிகழ்வுகள் இம்முறை சிறப்பாக நடைபெற்றது.

வருடந்தோறும் நடைபெறும் இவ்விழா நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக மூன்று வருடங்களின் பின்னர் இம்முறை நடைபெற்றது.

இந்தியா – அந்தரத்தீவு மௌலானா மௌலவி பீ.ஏ. முஹம்மது சைபுத்தீன் ஆலிம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி அதிபர் ஏ.நாகூர் மீரான் ஆலிம் பிரதம அதிதியாகவும் மௌலானா மௌலவி எம.;ஏ.எஸ்.
அபூபக்கர் ஹம்மாது ஆலிம் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது 2020ஆம் ஆண்டில் கல்வியைப் பூர்த்தி செய்த ஆறு பேரும்2021 ஆம் ஆண்டில்கற்கைநெறியைப்
பூர்த்தி செய்த நான்கு பேரும் இவ்வருடம் கற்கை நெறியைப்பூர்த்தி செய்துள்ள நான்கு பேரும் முஸ்தபிகளாக மௌலவி பட்டம் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை இவ்வாண்டில் நான்கு மாணவர்களுக்கு தலைப்பாகை சூடப்பட்டதுடன் விரிவுரையாளர் மற்றும் பணியாளர்களும் இதன்போது நினைவுப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.