ஏறாவூர்-06 கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான நிரந்தர கட்டடம் திறப்பு

0
137

‘சபிரிகம’ தேசிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் -06 கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கென அமைக்கப்பட்ட நிரந்தரக்கட்டடம் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

ஆர். றிக்னாஸ் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டதுடன் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம் , பிரதேச திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ஏஎச். சிகானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக தற்காலிக இடங்களில் இயங்கி வந்த இக்கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கென நிரந்தரக் கட்டட திறப்புவிழா நிகழ்வின்போது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் சிறுவர்களுக்கான அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.