


அருள்மிகு ஏழாலை – சூராவத்தை முத்துமாரியம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா மகோற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் எம்பெருமாட்டிக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் தம்பப்பூஜைகள் நடைபெற்று அதன்பின்னர் 8.30மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்று அம்பாள் உள்வீதியூடாக வலம்வந்து திருத் தேரில் ஏறி அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
அம்பாளின் இரதோற்சவ நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.