
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருந்தி நிதியத்தின் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நிதித் திட்டத்;தின் ஆதரவில் வெகுசன ஊடக அமைச்சு ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றது.
வெறுக்கத்தக்க பேச்சைக்கண்டிறிந்து எதிர்த்தல் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளள இந்த ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறியை நடாத்துவத்காக ஊடக அமைச்சு நியமித்துள்ள வழிநடத்தல் குழுவில் டான் ரிவியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சாமலன் தங்கராஜாவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கான நியமனக்கடிதம் வெகுஜன ஊடக அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. இந்த பயிற்சி நெறியில் வடக்கு கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்படவள்ளன.