ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதான வீதியில், அக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவால் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச செயற்பாட்டாளர் ஏ.எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த ஐம்பது விதவைகளுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.