ஐ.நா அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் மனு கையளிப்பு!

0
98

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த பரிந்துரைக்கும் மனு, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் நேற்று கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச்சிடம், கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மனு கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரியும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், சட்டத்தரணிகளால் கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ்க்கு அனுப்பிவைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் குறித்த மனு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.