ஐநா ஒரு கையாலாகாத நைனாவாகும்.அந்த நைனா அமெரிக்கா போன்ற பணம்படைத்தவனுக்குத்தான் நல்ல நைனாவாக இருப்பதை தவிர எந்தவொரு பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறுபான்மையினத்துக்கும் நல்ல நைனாவாக இருந்து தீர்வு காணமுடியவில்லை என
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நடேசன் சுந்தரேசன் எனத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றபோதே தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
இன்று உலகத்தை ஆட்டிப்படைக்கும் வியாதியாக கொவிட்-19 வைரஸானது உலகநாடுகளின் பொருளாதார நிலைமையை கூறுபோட்டு அழித்துக்கொண்டு பொருளாதாரத்தை மலினப்படுத்திக்கொண்டு உலகமக்கள் கஸ்டப்படும் இன்றைய நிலையில் இஸ்ரேல் திட்டமிட்டு பாலஸ்தீனம்மீது ஒரு இரக்கமற்றஇஒரு கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
கமாஸ் இயக்கம் இஸ்ரேலை போய் பின்னால் சுரண்டுவதும்இபின்னர் இஸ்ரேல் அதற்கு அடிப்பதும் அதனால் தாக்கப்பட்ட பாலஸ்தீனம் நீதிஇநியாயம் கேட்டு ஐ.நா செல்வதும்இஇன்று நேற்று மட்டுமல்ல பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.இதற்கு ஐக்கியநாடுகள் சபை சரியான ஒரு தீர்வை இதுவரையும் முன்வைக்கவில்லை.
கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தகாலத்தில் தனது முழுமூச்சுடன் தமது முழுமையான ஆதரவையும் கொண்டு இந்தப்பிரச்சனையை தீர்க்கவேண்டுமென கரிசனை காட்டினார். அந்தநேரத்தில் இதே கமாஸ் இயக்கமானது ஒரு பாலஸ்தீன குடிமகன் யசீர் அரபாத்துக்கு பெரும் தடையாக இருந்தது. இவ்விடயமாக யசீர் அரபாத் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமையை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்.இந்த இயக்கம் போராட்ட காலத்திலும் நடாத்திய வேதனையை காட்டிலும் இப்போது சமாதான ஒப்பந்த காலத்திலும் மிகுந்த வேதனையாக இருக்கின்றது. எல்லாவற்றையும் கமாஸ் இயக்கம் குழப்பிக்கொண்டிக்கின்றது. இந்த இயக்கத்தை காரணம் காட்டிக் கொண்டிருக்கின்றது.4பேர் இஸ்ரேலியர் இறந்ததைக் காட்டி முழு இஸ்ரேலையும் அழிக்க முற்படுகின்றார்கள்.இதுவரையும் இஸ்ரேலில் 266பேர் இறந்துள்ளார்கள் .இஸ்ரேலில் பத்திரிகையாளர்களின் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் அழிந்து சேதமடைந்துள்ளது.அக்கட்டிடத்தில் செத்துப்போனவர்கள் யார்இயாரென்று இன்னும் அறிய முடியாமல் இருக்கின்றது.