ஐக்கிய நாடுகளின் சபையின் தீர்மானத்தில் இருந்து விலகி, நாட்டையும் இராணுவ வீரர்களையும் காப்பாற்றியுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதுடன், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என்றும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று, களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று எமக்கு முக்கியமானதோர் நாளாகும்.
இன்றுடன் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்று ஒரு வருடம் பூரணமாகிறது.
அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு என்பது, நாட்டின் முக்கியமான காலமாகும் என கூற விரும்புகிறேன்.
2019 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி எமக்கு மிகவும் கடினமானதொரு நாடே ஒப்படைக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு நாம் ஒப்படைத்த நாடு அல்ல, 2019 இல் ஒப்படைக்கப்பட்டது.
நாம் அன்று ஒப்படைத்தது, யுத்தம் நிறைவு செய்யப்பட்ட நாட்டின், மூன்றில் ஒரு பங்கு, சுதந்திரமான அனைத்து மக்களும் சுதந்திரமாக பயணிக்கக் கூடியதான ஒரு நாடு.
நாட்டின் முக்கியத்துவத்தை, வரலாற்று ரீதியில் மேலெழச் செய்தே, 2015 இல் நாம் இந்த நாட்டை ஒப்படைத்தோம்.
புதிய துறைமுகம், புதிய விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, நாடு முழுவதும் வீதிகள் அமைக்கப்பட்டு, வரலாற்று ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடொன்றையே நாம் ஒப்படைத்தோம்.
அனைத்து விடயங்களிலும் தன்னிறைவு பெற்ற நாட்டையே நாம் ஒப்படைத்தோம்.
அத்துடன் 2020 இற்குள் நிறைவு செய்ய தயாராக இருந்த, பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்திருந்த ஒரு நாட்டையே, நாங்கள் 2015 இல் ஒப்படைத்திருந்தோம்.
2015 அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்றவுடன் செய்தது, நாம் 2020 இல் நிறைவு செய்வதற்கு திட்டமிட்டிருந்த, அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது ஆகும்.
நிறுத்தியது மாத்திரமன்றி, அதுவரை நாம் செய்திருந்த திட்டங்களின் மூலம், பழிவாங்கல்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
எம்மை மாத்திரமன்றி நாம் கட்டியெழுப்பிய கட்டிடங்களையும் பழிவாங்கினர்.
மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தினர்.
நாடு முழுவதும் நாம் நிறுவிய மஹிந்தோதய ஆய்வகங்களின் பெயர் பலகைகளை கழற்றி எறிந்தனர்.
சில இராணுவத்தினரை சிறையில் அடைத்து, ராஜபக்ஷர்களை காட்டிக் கொடுத்தால் விடுதலை செய்கிறோம் எனும் அளவிற்கு, சித்திரவதை செய்தனர்.
தாய் நாட்டை காப்பதற்காக போர் புரிந்த வீரர்களை குற்றவாளிகளாக நோக்கினர்.
இராணுவ வீரர்கள், எந்நேரத்தில் என்ன நேரும் என்ற அச்சத்தில், மறைந்து வாழ்ந்தனர்.
இதற்கு பிரதிபலன் கிடைத்தது.
2010 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு குண்டேனும் வெடிக்காது பாதுகாக்கப்பட்ட நாட்டில், உயிர்த்த ஞாயிறன்று, உலகுக்கே கேட்கும் வகையில் குண்டு வெடித்தது.
அன்று அரசாங்கம் எந்தளவு பொறுப்பற்று செயற்பட்டது என்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகளில் முன்வைக்கப்பட்ட, சாட்சிகளின் மூலம் நாட்டிற்கு அறிய கிடைத்தது.
2015 இல் ஒப்படைக்கப்பட்ட நாட்டை விட, பலவீனமடைந்த, அழிவடைந்த, பாதுகாப்பற்ற நாடொன்று, 2020 இல் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுவதற்கு அதுவே காரணம்.
தோல்வியடைந்த நாடொன்றே எமக்கு ஒப்படைக்கப்பட்டது.
எனினும், நண்பர்களே 2015 இல் தொடர்ந்து நாம் ஆட்சி செய்திருந்தால், 2020 இல் பல்வேறு இலக்குகள் எட்டப்பட்டு, ஒரு முழுமையடைந்த நாடொன்றை கட்டியெழுப்பியிருப்போம் என்பதை நான் கூற விரும்புகிறேன்.
எங்களுக்கு இப்போது இரு தரப்பு பொறுப்பு உள்ளது.
ஒன்று 2015 க்குப் பிறகு அழிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது.
மற்றையது முழு உலகமும் எதிர்கொண்டுள்ள, கொவிட்-19 நெருக்கடியை எதிர்கொண்டு, இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்துவது ஆகும்.
கொவிட் -19 தொற்றை ஒழிப்பதுடன், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
2005 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, எங்கள் முதல் ஆண்டு மிகவும் பொறுமையாக கடந்து சென்றது என்று, எனக்கு நினைவிருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்குள், நாட்டை விடுவிக்கும் வேலைத்திட்டம், முதலாவது ஆண்டில் திட்டமிடப்பட்டது.
அதைத்தான், நாங்கள் கடந்த ஆண்டு செய்தோம்.
2005 ஐ விட, மோசமான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்கிறோம்.
ஆனால் நாம் இப்போது ஒரு நாடாக சரியான முடிவை எடுத்துள்ளோம்.
எத்தகைய சிரமங்கள் காணப்படினும், யாருக்கும் அடிபணியாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப, தைரியமாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
போர் வீரர்களைத் தூண்டுவதற்காக, துரோக சக்திகளால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட, மனித உரிமைத் தீர்மானத்தில் இருந்து நாங்கள் விலகினோம்.
எவ்வளவு சிரமப்பட்டாலும், நாட்டைக் காட்டிக் கொடுக்கவோ, தலைக்குனியவோ செய்யாத மக்களாக, நாங்கள் முன்னேறி வருகிறோம்.
எனவே, நாங்கள் மிகவும் சரியான முடிவுகளை எடுத்து, இந்த ஆண்டுக்குள் முன்னேறுவோம்.
என குறிப்பிட்டுள்ளார்.
Home முக்கிய செய்திகள் ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலகி, நாட்டையும் இராணுவ வீரர்களையும் காப்பாற்றியுள்ளோம்- பிரதமர்