ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் ஜூனில் ஆரம்பம்

0
109

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது.

எனினும், இந்தமுறை அமர்வில் இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை வழங்குவார்.

அன்றைய தினமே அவர், இலங்கை, ஈரான் இஸ்லாமிய குடியரசு, நிகரகுவா பற்றிய தனது எழுத்துபூர்வ அறிக்கையை சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.