ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மதும பண்டார தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பிலுள்ள சமய வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று சமயப் பிரமுகர்களை சந்தித்தது.
இதன் போது மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜூம்ஆப பள்ளிவாயலுக்கும் வியஜம் செய்து அங்கு பள்ளிவாயலின் நிருவாகிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரன, இம்றான் மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான கணேச மூர்த்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.முஸ்தபா உட்பட அக்கட்சியின் பிரமுகர்கள் பள்ளிவாயலின் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஒரு நிகழ்ச்சி நிரலாக இனவாதம் காணப்படுவதுடன் தமிழ் முஸ்லிம் மக்களின் இன உறவை குலைக்கின்ற ஒரு சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப் கருத்து தெரிவித்தார்.