பலாங்கொடையிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பணிக்குச் செல்வதற்காக ஒரே பஸ்ஸில் பயணித்த 18 பேரே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஹப்புத்தளை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பிட்டரத்மலை, தொட்டலாகல, தம்பேத்தென்ன ஆகிய தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிவருபவர்கள் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கடந்த 20ஆம் திகதி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில் மேலும் 33 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 18 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.