நாட்டின் பிரதமரும் புத்தசாசன சமய விவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சருமான மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இலங்கை மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து மீள்வதற்கும் நாட்டை விட்டு கொரோனா ஒழியவும் அருளாசி வேண்டி இன்று மட்டக்களப்பு ஓட்டமாவடி பெரிய முகைதீன் ஜிம் ஆப் பள்ளிவாசலில் இறை துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பேணி துஆப் பிரார்த்தனையில் பள்ளிவாசலின் பேஷ் இமாம் ஏ.எல்.எம்.முஸ்த்தபா நடத்தி வைத்தார்.
இதன்போது பள்ளிவாசலின் தலைவர் ஓய்வு பெற்ற மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜீனைட், மற்றும் பொதுஜன பெரமுன மீராவோடை அமைப்பாளர் றபீக் ஏ கபூர் உள்ளிட்ட பள்ளி வாசல் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.