ஓமானுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

0
82

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில், இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் ஓமான் தூதுவருக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ விஜயங்கள், ஆய்வுகள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதிக்கு வலுச்சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.