மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிப்பளை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 10,00080 மில்லி லீடர் கொள்ளவுடைய கோடா பெறல் ஒன்றும், எரிவாய்வு சிலிண்டர்கள், ஒரு கேன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைபிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்மாசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போதைப்பொருள் தடுப்பு நவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.