யாழ்ப்பாணம் – கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா மார்ச் மாதம் 3, 4ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் 8500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் 2500 பேர் கச்சதீவு திருவிழாவிற்கு செல்லவுள்ளதாக வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு விசைப்படகில் 35 திருப்பயணிகள், 5 பணியாளர்கள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.