கஞ்சாவினை கடத்தி சென்ற சந்தேக நபர் கைது

0
143

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர வீதியில், 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவினை கடத்தி சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.51 வயதுடைய காரியப்பர் இப்றாஹீம் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

அக்கரைப்பற்று இராணுவ முகாம் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய,மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில்குறித்த சந்தேக நபர் கைதானார். மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.