இலங்கையிலேயே கடந்த ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய சேதன உரம் வட்டம் புழு எனப்படும் நிமற்றோடாக் பரவியுள்ளதுடன் அரசாங்கம் உண்மையான பிரச்சினையை வெளியே விட அச்சப்படுவதாகவும் இந்த நிலைமையானது கொரோனாவை விட இது பாரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தப்போவதாகவும் கமநல அமைப்புக்களின் மட்டக்களப்பு மாவட்ட அதிகார சபை தலைவர் அ.ரமேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கமநல அதிகார சபையின் அமைப்பினர் இன்று மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அண்மைக்காலமாக விவசாயிகள் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றை எதிர்நோக்கு கொண்டிருக்கின்றோம்.இலங்கையிலேயே கடந்த ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய சேதன உரம் வட்டம் புழு எனப்படும் நிமற்றோடாக் பரவியுள்ளது. அரசாங்கம் உண்மையான பிரச்சினையை வெளியே விட பயப்படுகினன்றனர்.
அண்மைக்காலமாக இந்த சேதன உரம் பாவித்ததால் ஏற்பட்டுள்ள இந்த வட்டப்புழு நோய் வேளான்மையின் வேரிலே முடிச்சுகளை ஏற்படுத்துவதால் அந்த வேரூடாக உறிஞ்சப்படும் நீர் அல்லது போசனைகளோ உரிஞ்சாத தன் காரணமாக அந்த வெள்ளாமை மஞ்சள் நிறமாகி கபில புள்ளிகள் ஏற்படுகின்றது. இது பொட்டாசியம்,பொஸ்பரஸ் குறைபாடு என்று கூறப்படுகின்றது. இதுஏற்றுக்கொள்ளக்கூடிய யாதார்த்தமான விடயம்.இருந்தாலும் மண்ணில் உள்ள பொட்டாசியம்,பொஸ்பரஸை உரிஞ்சுவதற்கு கூட இந்த வட்டப்புழு இடையூறாகவுள்ளது.இது உண்மையில் அண்மையிலே வந்த கொரோனாவை விட இது பாரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தப் போகின்றது.
இதனைக்கட்டுப்படுத்துவதாகயிருந்தால் விவசாயிகள் சிறந்த பயிற்சிகளைப்பெற்றிருக்கவேண்டும். இது நீரில்,விவசாயிகளின் கால்களினால்,உழவு இயந்திரம்,அறுவடையிந்திரம் உட்பட பல வழிகளில் பரவும் நிலையுள்ளது.
இந்த கிருமியானது நீர் உள்ளநேரம் மேலுக்கு வந்து தாக்கும் நீர் இல்லாத நேரம் நிலத்திற்கு அடியில் சென்றுவிடும்.