கடன் மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் ஒத்திவைப்பு!

0
154

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்காக இன்று இடம்பெறவிருந்த கட்சி தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வார இறுதியில் அவசர நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் குறித்த தினங்களில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான யோசனை என்பன குறித்து விவாதிப்பதற்காக இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த கூட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.