ஹிக்கடுவ கடலில் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுத் தம்பதியினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். குறித்த பகுதியில் சேவையிலிருந்த ஹிக்கடுவ காவல்துறை அதிகாரிகளால் அவர்கள் மீட்கப்பட்டனர். 47 மற்றும் 46 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.