கடவுச்சீட்டு புகைப்படம் எடுக்கும்
உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

0
258

பாஸ்ப்போட் சேவர் டவுண் செய்யப்படுவதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்கள் போராட்டம் தமக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.

அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் அம்பாரை மாவட்ட சங்கம் தனியார் விடுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அம்பாரை மாவட்ட நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.பிரகாஸ் இவ்வாறு கூறினார்.

இச்சந்திப்பில் மாவட்டத்தை சேர்ந்த அனுமதி பெற்ற 37 ஸ்ரூடியோ உரிமையாளர்களும் கலந்துகொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.