கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர் பலி

0
271

கத்தார் தலைநகர் தோஹாவில் புதன்கிழமை (22) கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கத்தாரின் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தோஹாவின் பின் டர்ஹாம் சுற்றுப்புறத்தில் நான்கு மாடி கட்டிடம் இருந்துள்ளது.

இந்நிலையில், ஒன்பது பேர் உயிர்தப்பியுள்ளதோடு, உயிரிழிந்த நபர் கட்டிடம் இடிந்து விழுந்தபோது கட்டிடத்திற்குள் இருந்துள்ளார்.

உயிரிழந்த இலங்கையர் 56 வயதுடையவர் எனவும் அவரது மகனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 60 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கத்தாரில் பணிபுரியும் அவரது மகனினால் கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.