கண்டியின் பல வீதிகளில் இன்று (14) காலை முதல் நண்பகல் 12.00 மணி வரை வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பல வெளிநாட்டு தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் பயிற்சி அமர்வு காரணமாக வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த வீதிகள் திடீரென மூடப்பட்டுள்ளமையினால் சாரதிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.