கண்டியில் மீட்கப்பட்ட மற்றுமொரு சொகுசு வாகனம்!

0
52

கண்டியில் மற்றுமொரு நவீன சொகுசு டிஃபென்டர் ஜீப் வண்டி ஒன்று தலைமையக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் கடந்த காலங்களில் பல சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று மற்றொரு சொகுசு வண்டி மீட்கப்பட்டுள்ளது.பொலிஸாரால் மீட்கப்பட்ட வாகனம் கண்டியில் உள்ள முன்னணி மீன் விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

இந்த வாகனம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த நேரடி முறைப்பாடுக்கமைய கைப்பற்றப்பட்டுள்ளது.