கண்டி கட்டுகஸ்தோட்டையில் அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் மீட்பு

0
143

கண்டி, கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள மஹாவலி கங்கையிலிருந்து அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலத்தை, கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் நேற்று (19) மாலை மீட்டுள்ளனர்.

பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 50, 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.