கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின் ஊழியரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை

0
1

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்ய புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுமதியின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த அறையை காண்பித்ததாக அந்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

வெளிநபர்களை புகையிரத நிலைய சமிக்ஞை அறையினுள் நுழைய அனுமதித்தமை தொடர்பாக புகையிரத பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தியதை தொடர்ந்தே ஊழியரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.