கண்டி பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இல்லகொல்ல பிரதேசத்தில், நபரொருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 39 மற்றும் 52 வயதுகளையுடைய இருவர் குறித்த நபர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.