பலாங்கொடை – கதிர்காமம் பிரதான வீதியில் கல்தொட்ட, நவனலிய பிரதேசத்தில் இன்று அதிகாலை மண்மேடு சரிந்து பாறைகள் வீழ்ந்மதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மண்மேடு, பாறைகள் சரிந்து வீதியில் விழுந்துள்ளன.
எனவே அந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கல்தொட்ட பொலிஸார் அறிவித்துள்ளனர்.