கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின்
ஒளிவிழா நிகழ்வு

0
302

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘2022 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதய ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை எலக்ஸ் ரொபட் தலைமையில் நடைபெற்ற ஒளி விழா நிகழ்வில் மட்டக்களப்பு கல்முனை செங்கலடி ஆகிய மறைகோட்ட இளைஞர் ஒன்றிய இளைஞர் யுவதிகளின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றன ஒளிவிழா நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஒளிவிழா நிகழ்வு கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அசாதாரன நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலை மீண்டும் 2022 மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் இளைஞர்களின் ஒத்துளை ப்புடன் ஒளிவிழா நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடதக்கது