கந்தரோடையில் நகை கொள்ளை! பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது.

0
400

சுன்னாகம் கந்தரோடை யில் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி நகை கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி கடந்த இரண்டாம் திகதி சுன்னாகம் கந்தரோடையில் இடம் பெற்ற திருட்டு சம்பவத்தோடு தொடர்புடைய 4பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டோரிடமிருந்து திருடப்பட்ட நகையில் உருக்கிய நிலையில் ஒரு தொகுதி நகையினையும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.

குறித்த திருட்டில் ஈடுபட்டவர்கள் சங்குவேலி மானிப்பாய் பொலிஸ் ப மற்றும் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள்.மேலதிக விசாரணைக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தலைமறைவாகியுள்ள இருவர் தொடர்பாக யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்து வருகிறார்கள்.