கமநல கேந்திர நிலையத்தில்
இலவச யூரியா உர விநியோகம்

0
146

பெரும்போக விவசாயச் செய்கைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமெரிக்க நாட்டின் யுஎஸ்ஜடி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் இலவச யூரியா உர விநியோகம் வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்தில் வழங்கப்பட்டது.
வாழைச்சேனை கமநலகேந்திர பெரும்பாக உத்தியோகஸ்த்தர் ஜெயகாந்தன் இதனை வழங்கி வைத்தார்.
2.5 ஏக்கர் அளவுள்ள நெல் காணியில் விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கே முன்னுரிமை அடிப்படையில் இவ் உர விநியோகம் வழங்க்பட்டுள்ளது.

அரச பணி விவசாயிகள் தவீர்ந்த 805 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு இவ் உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 16 கமநல கேந்திர நிலையங்களுக்கு 21141 மூடைகள் தேவையான நிலையில் இதுவரை 14681 மூடைகளே வழங்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக மாவட்டத்தில் இலவச உரவிநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜெகநாத் தெரிவித்தார்.