கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு!

0
61

கம்பஹா தம்மிட்ட பிரதேசத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை குறிவைத்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.