கரவெட்டி அருள்மிகு பத்திரகாளி
அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

0
381

மட்டக்களப்பு கரவெட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் 108 சங்காபிசேகமும் இடம்பெற்றது.

ஆலய பிரதம குருவாமதேவ சிவாச்சாரியார் நித்திய கிரியாஜோதி சிவஸ்ரீ அரியரெத்தினம் குருக்களின் தலைமையில் பாற்குட பவனியும் 108 சங்காபிசேகமும் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈச்சந்தீவு ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து விநாயகர் பூஜை வழிபாடுகளுடன் மாபெரும் பால் குட பவனி கரவெட்டி ஈச்சந்தீவு பிரதான வீதி ஊடாக பக்த அடியார்களின் அரோகரா கோஷங்களுடன் முன்னெடுக்கப்பட்டு,ஆலயத்தினை வந்தடைந்ததும் அடியார்கள் கொண்டுவந்த பால் அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து விசேட யாக பூஜையுடன் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் மேளதாளம் முழங்க,பக்த அடியார்களின் அரோகரா கோஷங்களுடன் 108 சங்காபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது.

கரவெட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழாவில்பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டதுடன்,அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கரவெட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள தீமிதிப்பு உற்சவத்துடன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு உற்சவம் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது